அண்ணன் தங்கை பாசம் குறித்த
பட்டாம்பூச்சி போல பறந்து பறந்து விளையாடினாய்..!
அப் பட்டாம்பூச்சியை சிறைபிடித்து சென்றுவிட்டனர்..!
இன்று பாழடைந்த வீடாக காட்சியளிக்கிறது என் வீடு... இப்படிக்கு உன் அன்பு அண்ணன்.
அண்ணன்-தங்கை
உறவென்பது..
வெளிக்காட்டி
கொள்ள முடியாத
விலைமதிப்பில்லா பாசம்..!
என் உடன் பிறந்தவளே...
என் இதயத்தை உன் அன்பால் திருடியவளே..!
நான் செய்யும் சிறு தவறுகளை கூட கூறி எனக்கு அடி வாங்கி கொடுத்த அன்னையே..!
உன்னை கரம் பிடித்து வழியனுப்ப என் மனம் தயங்குகிறது..!
புகுந்தவீட்டில் தனக்கொரு
கஷ்டம் என்றால், தட்டி கேட்க
தன் அண்ணன் வருவான்
என்ற கர்வம்.
எல்லா தங்கைகளுக்கும்
உண்டு...!
தன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் தன் தங்கை வாழ்க்கையை முதலில் பார்த்து பிறகு தனக்கான வாழ்க்கையை தேடுபவன் உண்மையான அண்ணன்.
கூட பொறந்தாலும் சரி
பொறக்காம போனாலும் சரி
அண்ணன் தங்கை
அண்ணானு ஒரு பொண்ணு
மனசார கூப்டா அண்ணனுக்கு
உண்டான மதிப்பு, பாசம்,
அக்கரை, அன்பு,பாதுகாப்பு
எல்லாம் அந்த அண்ணனோட
கடமையா ஆயிடும்....!
சிரித்த முகத்துடன் மனதில் அழுகையுடன் தன் தங்கையை புகுந்த வீட்டுக்கு வழியனுப்பும் அண்ணனின் அன்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்..?
சந்தோஷமா
வாழ காசு,பணம்
தேவையில்லை..
பாசமான
ஒரு அண்ணன்
இருந்தாவே
போதும்..!
தன் கனவுகளை எட்ட முடியாமல் தனக்கு எதுவும் தேடிக் கொள்ளாமல் வீட்டுக்கும் தன் தங்கைக்கும் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு நல்வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்பவனே அவன் தான் சிறந்த அண்ணன்.
என்னதான் நல்ல புருஷன் கிடைச்சாலும் அவ மனசுக்குள்ளே அண்ணனுக்கு இணையான அன்பு கிடைக்குமா?
ஆயிரம்
உறவுகள் அருகில் இருந்தாலும்,
அண்ணா...
என்ற உறவு இல்லையென்றால்
அனாதைதான்..
என்னை நடக்க வைத்தாய்
என்னை வழி நடத்தினாய்
எனக்காக உனது வாழ்க்கையை தொலைத்தாய்....
என்னை கரம் பிடித்து வழி அனுப்பினாய்..
உன் அன்பு என்றும் மாறாது..
உன் அன்புக்காக ஏங்கும் உன் அன்பு தங்கை..!
என்னை வழிகாட்டும் அன்பன் ஆனவன்-
அன்பில் அழகான அப்பன் ஆனவன்
என்னை திட்டியே தீட்டுபவன்......
என்னை தோள் மீது வைத்து கொண்டாடுபவன்.
கேட்டதை உடனே வாங்கி தருவான்...
கெட்டது என்றால் கன்னத்தில் அடி விடுவான்...
குழந்தை போல் கொண்டாடுவான்...
குமரியானாலும் மன்றாடுவான்...
நெஞ்சோடு அணைப்பான்....
நெற்றி முத்தம் தருவான்...
என்னை நேசிக்கும் இன்னொரு அப்பா ..
என் மனதை புரிந்த கொண்ட முதல் மகன்.
காலம் போனாலும் உன் மடியில் குழந்தையாய்.
நான் காலமே ஆனாலும் உன் இன்னொரு
அன்னையாய்.
அண்ணன் வெறும் உறவு அல்ல...
ஒவ்வொரு பெண்ணின் உன்னதமான உணர்வு....
அண்ணன் தங்கச்சி உறவு என்பது மிகவும் ஆழமானது உணர்ச்சி மிகுந்தது தன் தங்கையை இன்னொருவருக்கு கரம் பிடித்து வழியனுப்பி வைக்க அவன் படும்
இன்னல்கள் ஏராளம்...!
அழுது அடம்பிடித்து பிடித்த பொருள் வாங்கிய என் அன்பு தங்கையே...!
உன் நினைவு இல்லாமல் ஒருபோதும் என்னால் வாழ முடியாது...!
எனக்காக வாழ்ந்த அன்னையை...
நீ எங்கு சென்றாலும் என்னை நீ மறவாதே....!
ஒரு அண்ணன்
தான் தங்கச்சி
மேல காட்ற அதிகபட்ச
பாசமே சண்ட தான்
உண்மையில் தவம் செய்திருக்க வேண்டும்...
எனக்கு ஒரு தங்கை உள்ளது...!
அவள் எனது
இரண்டாம் அன்னையே...!
அருகில் இருப்பவர்கள்
எல்லோரும்
'அன்பானவர்கள் இல்லை...
அன்பானவர்கள் எல்லோரும் அருகில் இருப்பது இல்லை.... என் அண்ணன் போல....
பெற்றோர்களை விட
அதிகமாக தன் அண்ணனிடம் அதிகமாக பாசத்தையும் , அன்பையும் காட்டுபவை தங்கையே...!
கோபத்தை கூட
அன்பகாக
காட்டுவது
அண்ணனின்
குணம்
அன்பை கூட
கோபமாக
காட்டுவது
தங்கையின்
மனம் !