இயற்கையை வர்ணித்து எடுக்கப்பட்ட கவிதைகள் இங்கு அமைய பெற்றுள்ளன.
இயற்கையை போற்றி பேணி காப்போம்
உள்ளடங்கிய தலைப்புக்கள்
☀ Iyarkai Kavithaigal
☀ Natural Quotes in Tamil
☀ இயற்கை கவிதைகள்
-----------------------------------------------------------
அழகிய இயற்கை கவிதைகள்
இயற்கையை விற்று(விட்டு) செயற்கையை உயிரூட்டி வளர்த்த மனிதன் இன்று..! இயற்கையின் கோபத்திற்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறான்..!
அனைத்து வாசனை திரவியங்களும் தோற்றுப்போகும் மழை தூறல் இன் போது என் மண்ணின் வாசனைக்கு முன்னால்..!
அழகிய மலை..! அமுதசுரபியாகிய அருவி..! ஆற்றங்கரையில் துள்ளிக்குதிக்கும் மீன்கள்....! இவையனைத்தும் எங்கும் காணக்கிடைக்காத மகிழ்ச்சி தரும்...! இயற்கையே உன்னுடன் நானும் வந்து சேரவா....!
பச்சை புல்வெளி...! சில்லென்று வீசும் காற்று...! எண்ணிலடங்கா மரங்கள்..! இதமான பறவைகளின் ஓசைகள்..! இதைப் பார்த்தால் இன்பம் ஊற்றும். வாழ்ந்தால் மகிழ்ச்சி பெருகும்...!
செக்கச் சிவந்த வானத்தின் நிழல், ஆற்றில் பட்டு காணக் கிடைக்கும் அரிய அழகு...!
என்ன சொல்வது வியப்போ வியப்பு..!
பசுமையை போர்வையாய் அணிந்த மலையே..! இன்னும் உனக்கு குளிர்ச்சி அடங்கவில்லையா..!
காற்று என்பது இயற்கையானது அதை இயற்கையால் மட்டுமே பெறவேண்டும் .. செயற்கையால் அல்ல...
சலசலவென்று ஊற்றும் அருவியே..! உன் இசைக்கு இணையான ஒரு இசை உண்டோ இவ்வுலகத்தில்..!
பறவைகளை வாங்கி கூண்டில் அடைத்து வைத்து, வளர்ப்பதை விட்டுவிட்டு ஒரு மரத்தை மட்டும் நட்டு வைய்யுங்கள்..பறவைகளே கூடுகட்டி வாழ்ந்து கொள்ளும்..!
செரித்ததை உரமாகவும்..! செரிக்காததை விதையாகவும் ஆகவும் மாற்றுவை பறவைகள்..!
இன்று காக்கப்படும் ஒவ்வொரு மரமும் நாளை நம் குழந்தைகள் இலவசமான காற்றை சுவாசிக்க வழி
செய்யும்..!
.
.......................................................................
இயற்கையின் அழகு கவிதையிலிருந்து, பிரகாசமான வண்ண பூக்கள் அல்லது வானத்தில் உயரமான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடுகள் நிறைந்த பசுமையான புல்வெளிகளின் தரிசனங்களைத் தூண்டுவதிலிருந்து, இயற்கையின் எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி எண்ணில் அடங்காது..!