Motivational Story in Tamil
அப்துல் கலாம் ஐயா,அவர்கள் கிடைக்கும் நேரம் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி அவர்களுக்கு ஊக்கம் அளிப்பார்.
ஒரு நாள் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார், முதலில் ஐயா அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கை வார்த்தையை பேசி அவர்களுக்கு உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவாற்றினார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார். அப்போது ஒரு மாணவன் ஐயா அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினான்.
ஐயா "நீங்கள் கனவு காணுங்கள் உங்கள் இலக்கை அடைவீர்கள்" என்று சொன்னீர்களே, நானும் கனவு காண்கிறேன் ஆனால் என் கனவுகளின் இலக்கை அடைய மிகவும் பிரச்சனைகளாக இருக்கிறது , அப்படியிருக்கும்போது என்னால் எப்படி நான் கண்ட கனவுகளின் இலக்க அடைவது? என கேள்வி எழுப்பினான்.
அதற்கு அப்துல் கலாம் ஐயா அவர்கள் ஒரு கதையைக் கூறி மாணவருக்கு விளக்கம் அளித்தார். ஐயா கூறியதாவது, "ஒரு காட்டில் நிறைய பறவைகள் இரையை தேடி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன அப்போது திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது மழை பெய்ய தொடங்கியதை அறிந்த பறவைகள் தாங்கள் தங்கியிருக்கும் இருப்பிடத்தை நோக்கி பறக்கத் தொடங்கின. ஆனால் ஒரு பறவை மட்டும் தன் இருப்பிடத்தை நோக்கி பயணிக்காமல் மேலே பறக்க முற்பட்டது.
இதனை அறிந்த மற்ற பறவைகள் இந்தப் பறவை ஏன் முட்டாள்தனமாக மேலே பறக்கிறது என பேசியது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பறவை மெல்ல மெல்ல மேலே நோக்கி பயணித்தது மற்ற பறவைகள் அனைத்தும் இருப்பிடத்தை அடைந்தன. அந்தப் பறவை மேகத்தை தாண்டி மேலே பறந்தது. அந்தப் பறவை தான் 'கழுகு' . அது மேகத்தை தாண்டி பறந்து தன் இரையை தேடியது. மேகத்திற்கு மேலே மழை பெய்யாது என்பதை அறிந்த அந்த பறவை, தன் கடும் முயற்சியால் தன் இலக்கை அடைந்து வெற்றி கொண்டது.
அந்தப் பறவை மழை பெய்யும் போது மேலே பறப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது தெரியுமா? மழைத்துளி பறவையின் இறக்கையில் பட்டு அதற்கு வலி ஏற்படுத்தும். அது வலியையும் பொருட்படுத்தாமல் தன் இலக்கை அடைய சிறிது சிறிதாக முயற்சி செய்து ,கடைசியில் தன் இலக்கை அடைந்தது." என்று ஐயா அவர்கள் கூறினார்.
ஐயா அவர்கள், அந்த மாணவனிடம் இந்த பறவைகள் போல மன உறுதியும் எவ்வளவு கஷ்டங்களும், தடங்கல்களும் வந்தாலும் சிறிதும் சோர்வடையாமல் முயற்சி செய்தால் இலக்கை அடையலாம், எனக்கூறி மாணவனுக்கு அறிவுரை கூறினார்.
அப்துல்கலாம் ஐயா கூறிய இக்கதையில் இருந்து "கனவு காணுங்கள் அதை அடைய இடைவிடாமல் முயற்சி செய்யுங்கள் உங்கள் இலக்கை நீங்கள் அடைவீர்கள்"