Amma pasam kavithai in Tamil
கண்கள் இல்லாமல்
ரசித்தேன்..! காற்று
இல்லாமல் சுவாசித்தேன்..!!
வார்த்தை இல்லாமல்
பேசினேன்!! கவலை
இல்லாமல் வாழ்ந்தேன்!!
அது..
என் தாயின் கருவறையில்
மட்டுமே..............
"உன்னை விட்டு
எத்தனை உறவுகள்
மதிக்காமல்
சென்றாலும் கூட..! உன்
உணர்வுகளுக்கு
மதிப்பளித்து...
உன் கண்ணீரைத்
துடிப்பவள் தான்...
"அம்மா"
நான்
எவ்ளோதான்
கோவ பட்டாலும்
என்னை என்றுமே
வெறுக்காத
ஒரே ஜீவன்
என்னுடைய அம்மா
மட்டுமே..!!
எப்படி கதறி அழுதாலும்
சரி...
எவ்வளவு பணம்
கொடுத்தாலும் சரி..
திரும்ப கிடைக்காத
நாட்கள்...
என்றால்
நாம் தாய் தந்தையுடன்
மகிழ்ந்த வாழ்ந்த
நாட்கள் மட்டும் தான்.!!
என்னோட முகம் பார்க்கும் முன்பே,
என்னோட குரல்கேட்கும் முன்பே,
என்னோட குணம் அறியும் முன்பே,
என்னை நேசித்த ஓர் இதயம்....
என் "அம்மா"
எந்த உறவாக இருந்தாலும்,
எதையோ எதையோ
எதிர் பார்த்து தான்
பழகுகின்றனர்....
எதையும் எதிர்பார்க்காத
உறவு இருக்கும் என்றால்,
அது "அம்மா அப்பா" மட்டும் தான்.!
எத்தனை
முறை சண்ட போட்டாலும்....
தேடிவந்து பேசும் தெய்வம்
என் தாயை தவிர வேறு ஏதும் உண்டா.....
இந்த உலகத்தில...?
அம்மா...
உன் கருவில் சுமந்து உன் கனவால்
என்னை வளர்த்தவள்
என் சிரிப்புக்கு எதிர் சிரிப்பும் என் அழுகைக்கு எதிர் அழுகையும் காண்பிப்பவளே...
ஆசை ஆசையாய் அணைத்து கொடுத்த முத்தம் ஆயுள் வரை
மறக்காமல் மனதில் நிற்கிறது..
அன்பேனும் ஊற்றால் என்னை
நனைய வைத்த தெய்வமே...
உன் அன்புக்கு இந்த உலகம்
ஈடுடாகுமா...?
காலமெல்லாம் உன் அன்பு
என்றுமே மாறமால்
என்னை வாழ வைக்கும்
தெய்வமே
இந்த உலகத்தில் உன்னை
விட பெரிய சக்தி
இவ்வுலகில்
ஏதும் இல்லை..