Tamil Sirukathaigal - Short Stories in Tamil
பயம் வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி
நாம இந்த வாழ்க்கையில சந்திக்கும் நிகழ்வுகளை கண்டு எப்போதாவது பயம் ஏற்பட்டுள்ளதா?
ஒருவன் அவன் வாழ்நாளில் இருந்து பயம் தான் அவனுக்கு தோல்வியே.! நான் கடந்து வந்த பாதைகளை பற்றிய கதையில் பார்ப்போம்.
நாம வாழ்கின்ற உலகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைகளை சந்திக்கின்றோம். சில விஷயங்கள் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். சில விஷயங்கள் நமக்கு சோகத்தை கொடுக்கலாம்.
ஒரு மனிதன் சந்திக்கும் பயம்..
அவன் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும் என்பதை இக் கதைகளை பார்ப்போம்.
ஒரு மனிதன் சின்ன வயசுல இருந்து பயந்து பயந்து வாழ்ந்து வந்தான். அதற்கு காரணம் அவங்க அப்பா சின்ன வயசுல இருந்து சின்ன விஷயத்துக்கு கூட மிரட்டி மிரட்டி பயந்து பயந்து வாழ வைச்சுடாரு. இதனாலோ என்னவோ அவன் யாரிடமும் பேச மாட்டான். சொந்தக்காரங்க வந்தால் கூட அவனுக்கு அன்பா பேச தெரியாது. இப்படியே அதை வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது பெரிய ஆளாக வரணும் என்ற ஆசை மட்டும் அவனுக்கு இருந்தது. ஒரு சின்ன விஷயத்தை கூட பயப்படுவான் கடைக்கு வீட்டிலிருந்து போக சொன்னா கூட என்ன பொருள் வாங்கனும்னு யோசிச்சுக்கிட்டே போவான், அதுமட்டுமில்லாமல் பள்ளி க்கூடத்திற்கு பஸ்ல போகும்போது கூட டிக்கெட் எடுத்துட்டு மீதி சில்லறை எல்லாம் வாங்க மாட்டான்.
பள்ளிக்கூடத்தை விட்டா வீடு வீட்டு விட்டா பள்ளிக்கூட ன்னு இருப்பான். நல்ல நண்பர்கள் இருந்தாலும் கூட அவங்க கூட நல்லா பேச தயங்குவான். அவன் வாழ்க்கை என்னவாக போகுதோ தெரியல? நன்றாக படிப்பவன் ஓரளவு மதிப்பெண் பெற்றும் மேற்படிப்பை முடித்தான்.
அடுத்து கல்லூரி படிக்கும்போது அவனுக்கு ஒரே பயம் கல்லூரி நிறைய பேர் இருப்பார்கள் நம்மள ஏதாவது தொந்தரவு பண்ணுவாங்க என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
எப்படியோ சேர்ந்ததுக்கு அப்புறம் கல்லூரி வாழ்க்கை அவனுக்கு நல்லா சந்தோஷமா போச்சு. கல்லூரியில் யாரிடம்பேச மாட்டான்.இதனால் இவனை பார்த்து எல்லாரும் நக்கல் அடிப்பாங்க.
இப்படியே வாழ்க்கை சென்று கொண்டே இருந்தது கல்லூரி படித்து முடித்ததற்கு அப்புறம் என்ன வேலை கிடைக்கும் அப்படிங்கறது அவனுக்கு அப்ப யோசிக்க தெரியல.
இப்படியே இருந்தா அவன் வாழ்க்கை என்ன ஆவது ? கல்லூரி பேராசிரியர் கூட நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டதுண்டு அதுக்கெல்லாம் எந்த பதிலும் கூறாமல் மௌனமாக இருந்தான்.
விதி செய்த விளையாட்டு அவன் வாழ்க்கை பிறகு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இப்படிப்பட்டவர்களை நாம் என்னவென்று சொல்வது ஒரு பக்கம் அவனுடைய வாழ்க்கை முறையை சொல்லவா? இல்ல அவனுடைய மனதிற்குள்ளேயே ஏற்பட்ட பயத்தை சொல்லவா ? இதிலிருந்து உணரும் கருத்து பயம் ஒரு மனிதனை முன்னேற விடாமல் தடுக்கிறது பயம் ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாக இருக்கிறது.
அந்த மனிதன் தன் பயத்தினால் பெற்றோருக்கும் அவனுக்கும் ஒரு பயனும் இல்லாமல் ஆகிவிட்டார். வாழ்க்கையில நிறைய பேரு இப்படித்தான். ஆகையால் பயம், மனிதனுக்கு இன்னல்களை இதை உணர்ந்து பயத்தை போக்க நிறைய முயற்சிகளை எடுக்கணும். அதுதான் நமக்கும் நம் வாழ்க்கைக்கும் உதவிகரமாக இருக்கும். அந்த மனிதனுடைய வாழ்க்கை எப்போதும் கேள்விக்குறியே...!
யாராவது அவனுக்கு அறிவுரை கூறி
பயத்தை ஒழித்தால் மட்டுமே அவனால் பயத்திலிருந்து விடுபட முடியும்.
பயம் வாழ்க்கையை அழிக்கும்
பலவீனம் வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும்.