நாயின் மீது ஒரு மனிதன் வைத்திருந்த பாசக்கதை
நாய் - மனிதன் பாச கதை
Dog - Man Heart touching Story in Tamil
இந்த வாழ்க்கை நமக்கு சந்தோசத்தை தரலாம், துக்கத்தை தரலாம். ஆனா இந்த வாழ்க்கையை எதிர்கொள்வது மிகவும் சவாலானது. நிறைய மக்கள் உள்ள இந்த உலகத்தில் சிலரிடம் மனிதாபமும் இல்லை, இரக்கம் குணமும் இல்லை, என்பது வேதனைக்குரியதாகும்.
நாம நம் வாழ்க்கையில நிறைய பிரச்சினைகளை பார்த்திருப்போம். இக்கதையில் ஒரு நாயின் மீது அளவுகடந்த பாசம் வைத்த மனிதனைப் பற்றிப் பார்ப்போம்.
ஒரு சாலையில் பயணம் மேற்கொண்டு இருக்கும்போது சட்டென்று வழியின் நடுவே ஒரு குட்டி நாய் ஒன்று கடந்து சென்றது. இதனை அறிந்த அந்த மனுஷன் ஐயையோ..! எப்படியோ..? குட்டி அடிபட்டுச் சாகல..! என்று திருப்தி அடைந்தார். பிறகு அதை பார்த்தபடியே இருந்தார். ஒரு தெரு நாய் பெற்ற குட்டி நாய் உணவுக்காக சாலையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்த அவர், அந்த நாயை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க முடிவு செய்தார். அதன்படியே வீட்டிற்கு குட்டி நாயை கொண்டு வந்தார். அந்த நாயை பார்க்க மிகவும் சோகமாக, பாவமாகவும் இருந்தது. அதற்கு உணவை கொடுத்து அந்த குட்டி நாயை உறங்க வைத்தார்.
குட்டி நாய் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. நாட்கள் சென்றன, நாய் மிகவும் செல்லமாக விளையாடி வீட்டில் கவலைகளை மறைந்தது. சில நாட்களுக்குப் பிறகு அந்த நாயால் பிரச்சினை ஏற்பட தொடங்கியது.
அந்த மனிதன் வீட்டிற்கு அருகில் நிறைய வீடுகள் இருந்தன. அவர்கள் இரக்கம் குணம் மற்ற மனிதர்களாக வாழ்ந்து வந்தனர். நாய் வீட்டில் கட்டி வைத்திருக்கும்போது வெளிநபர்கள் வந்தால் குறைக்கும். அதனைக் கேட்டு அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் வந்து சண்டையிட்டு நாயை கொண்டு வேறு இடத்தில் விட்டு விடுங்கள் என்று கூறி பிரச்சனை ஆக்குவார்கள்.
நாயின் மீது அளவற்ற பாசம் கொண்ட அந்த மனிதன் என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் எங்கும் சென்று விட மாட்டேன் என்று கூறினார். நாயை அவ்வப்போது வெளியே திறந்து விடுவார்கள். அதுவும் வெளியில் கொஞ்சம் நேரம் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்துவிடும்.
ஒரு நாள் ஒரு முதியவர் அந்த நாயை கல்லால் அடித்தார். வலி தாங்க முடியாமல் இந்த நாய் அவரைக் கடித்தது. இதனால் அந்த முதியவர் சொந்தக்காரர்கள் நாயின் உரிமையாளரிடம் சண்டைக்கு வந்தார்கள். இதனால் அந்த நாயின் வீட்டிலுள்ளவர்கள் அந்த மனிதனுக்கு தெரியாமல் நாயே எங்கேயாவது கொண்டு போய் சென்று விடலாம் என்று முடிவு செய்து விட்டு வெளியே சென்று விட்டு விட்டன. இதனை அறிந்த அந்த நாயின் உரிமையாளர் நாயை எங்கு சென்று விட்டீர்கள்..? என்று குடும்பத்திலுள்ளவர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் கூற மறுத்துவிட்டனர். ஆனாலும் மனதை தளரவிடாமல் ஊர் ஊராக நாயை தேடி சுற்றினார்.
அப்போது நாய் அந்த மனுசனை பார்த்து ஓடி வந்தது. ஒரு நாள் முழுக்க கத்தி கத்தி நாய் சோர்வடைந்து காணப்பட்டது. உடனே நாயை வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பாடு போட்டு வளர்த்தார். பிறகு அதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் நாய் வெளியே வரும்போது விஷம் கலந்த உணவை போட்டு கொன்று விட்டனர்.
அந்த நாய் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. மனிதர்கள் தான் தீங்கு செய்தார்.
கடைசியில் அந்த மனிதன் கண்ணீருடன் மனதில் காயத்துடன் அந்த நாயை பிரிந்து வாழ்ந்தார்.
இரக்கமற்ற இந்த மனிதகுலம் இருக்கும் வரை இது போன்ற மனிதாபிமானம் அற்ற நிகழ்வு நடந்தது கொண்டே தான் இருக்கும்.