தமிழ் சிறுகதைகள் ( Tamil Sirukathaikal )
ஒரு மனிதன் செய்த தவறால் அவன் குடும்பம் எவ்வளவு சாவல்களை சந்திக்கிறது, என்பதை இந்த குருவிக் கூடு மண்டையன் ( Tamil short Story) கதை தெளிவாக கூறுகிறது. இந்த கதை உண்மையான நிகழ்வுகளின் தலுவல்களை கொண்டு கதை எழுதப்பட்டது.
மேலும் கதைகள்: CLICK HERE
ஒரு அழகிய தம்பதிகளுக்கு திருமணம் நன்றாக நடந்து முடிந்தது. வாழ்க்கையில் ஒரு இனிமையான தொடக்கம் ஆரம்பிக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் ஆரம்பமானது அவர்களது வாழ்க்கை. திருமணமாகி சில நாட்களுக்கு பிறகு அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை வந்தது. அவள் தன் கணவனிடம் மிகுந்த பாசத்துடனும் அன்புடன் இருந்தாள். ஆனா கணவனோ... வேறு ஒரு பெண்ணை பார்த்து மயங்கி அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான். அதனால் தன் பொண்டாட்டியை விட்டு பிரிந்து விடலாம் என யோசித்தான்.... அடிக்கடி தன் பொண்டாட்டிய துன்புறுத்தி கொடுமை படுத்துவான். அவளும் எவ்வளவு பொறுமையாக இருக்க முடியுமோ அவ்வளவு பெருமையாக இருந்தாள். சிறிது நாட்களுக்கு பிறகு அவள் கர்ப்பம் அடைந்தாள். அவன் இனியும் பொறுமை காக்க கூடாது என்று அவளை பார்த்து "உன்னை எனக்கு பிடிக்கல...நீ சரியில்ல... என்று கூறி "உன் அப்பன் வீட்டுக்கு போயிடுனு" சொல்லி அவள் அப்பன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
தந்தை வீட்டுக்குச் சென்று அவள் தன் நிலைமையை கூறி அழுதாள். அவளது பெற்றோர்கள் ஆறுதல் கூறி,பிறகு அவளது கணவன் வீட்டுக்கு தன் மகளை அழைத்துச் சென்றனர்.
அவனோ வேறு திருமணம் செய்து முடித்துவிட்டான். இதனை இதைக்கண்டு மிகுந்த மன மனவேதனைக்கு உள்ளாகி அவனைப் பார்த்து நீ நல்லாவே இருக்க மாட்ட "என் புள்ள வாழ்க்கையை நாசமாக்கியே.. நல்லாவே இருக்க மாட்ட" என்று சொல்லிட்டு வீட்டிற்குத் திரும்பினர்.
மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். வயிற்றில் குழந்தையுடன் அந்தப் பெண் ரொம்ப கவலை அடைந்தாள். நாட்கள் கடந்த பிறகு அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள். பெற்றோரின் தயவில் வாழ்ந்த அந்தப் பெண்மணி தனது பெற்றோர்களையும் இழந்து விட்டாள். அவளுக்கு துணையாக அவள் குழந்தை மட்டுமே எஞ்சியிருந்தது. குழந்தையும் வளரத்தொடங்கியது அவளை உறவினர்கள் பார்த்தால் ஏளனம் செய்து சிரிப்பார்கள். அந்தப் பெண் மனதில் வலியோடு தன் குழந்தையை வளர்க்க கடும் பாடுபட்டாள்.
செல்லமாக வளர்ந்த அந்தக் குழந்தை பெரிய ஆளாக மாறினான். அப்பா இல்லாமல் வளர்ந்த அவன் தன் அம்மாவின் நிலை பற்றி அறியாமல் ஆனந்தமாய் இருந்தான். கெட்ட நண்பர்களுடன் தொடர்பு இருந்ததால் மதுவுக்கும் புகைக்கும் அவன் அடிமையானான். அவன் வீட்டு தெருவில் அழகிய பெண்ணை பார்த்து அவளை காதலிக்க ஆரம்பித்தான். ஒரு சிறிய காகிதத்தில் தனது காதல் கீதத்தை எழுதி அதை அவளிடம் கொடுத்தான்.
அவளோ இதை வாங்கிப் படித்து கிழித்துவிட்டு அமைதியாக சென்று விட்டாள். இதனை யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்து வந்தாள். கொஞ்ச நாட்கள் போனபிறகு காதலை ஏற்றுக்கொண்டாள். இருவரது காதல் பயணமும் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவளது பெற்றோர் இந்த காதல் விவகாரம் தெரிய வர தன் மகளை கண்டித்தனர். அதற்கப்புறம் அந்தப் பெண் அவனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள். காதலில் தோற்ற அவன் மதுவும் புகையும் அதிகமாகி வாழ்க்கையை வெறுக்க தொடங்கினான். பார்பதற்கு குருவி கூடு போன்று அவனது தலை முடி இருந்தது. இதனை பார்த்து சிறுவர்கள் "குருவிக்கூடு மண்டையன்" என அவனை அழைத்து சிரித்தனர். இதனை அறிந்த அவனது தாய் மிகவும் கவலை அடைந்தாள். தன்னுடைய நிலைமையை எடுத்துக்கூறி, நீ இப்படி இருக்கக் கூடாது.. என்று அறிவுரை கூறினாள்.
அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக குடியை நிப்பாட்ட முடிவு செய்தான், வயதும் அதிகமாகி சென்று கொண்டே இருந்தது தன் மகனுக்கு திருமணம் செய்ய அவனது தாய் முடிவு செய்தாள். அப்பன் இல்லாத மகனுக்கு யாரும் பெண் தர விரும்பவில்லை. கடைசியில் எதுவுமே வாழ்க்கையில் நன்றாக அமையவில்லையே என்று வருத்தப்பட்டாள். சட்டென்று ஒரு நல்ல செய்தி அவளுக்கு வந்தது தன் மகனுக்கு ஒரு பெண் வரன் கிடைத்துள்ளதை அறிந்த உடன் அந்தப் பெண் வீட்டாரிடம் பேசி தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தாள்.
வீட்டிற்கு வந்த அந்தப் புதுப்பெண்ணை நன்றாக கவனித்து அவளுக்கு விருப்பமானது எல்லாவற்றையும் செய்து கொடுத்து மகிழ்ச்சி படுத்தினான். அழகான ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தான் இதனைக் கண்ட அந்தத் தாய் மிகவும் சந்தோஷப்பட்டு பெருமூச்சு விட்டாள். அவனின் அப்பன் தவறான பெண்ணை நம்பி சென்று பணத்தையும் உறவுகளையும் இழந்து நடுரோட்டில் நாய் போல திரியும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
இக்கதையில் இருந்து நீங்கள் அறிவன என்ன? கீழே பதிவிடுங்கள்..!