மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளை பற்றி பார்ப்போம்.
Top 10 Immunity Boosting Foods list in Tamil
நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?
மனிதனுக்கு நோயை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கிருமிகள் போன்றவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பல்வேறு வகையான கிருமிகளை நாம் அழிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 உணவுகள் :
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிறைய சத்துக்கள் தேவைப்படுகின்றன.
* வைட்டமின் C, E, D
வைட்டமின் A , ஜிங்க் , ஒமேகா 3, இரும்புச்சத்து, புரதம். போன்ற சத்துக்கள் தேவைப்படுகிறது. அவற்றை பற்றி பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்
1.சிட்ரஸ் பழங்கள்
வைட்டமின் C அதிகமுள்ள பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமக்கு நல்ல ஆற்றலைத் தருகின்றன. அதுமட்டுமல்லாமல் நெல்லிக்கனியும் சிறந்த ஆற்றலைத் தருகின்றன. எனவே இதை தினமும் நாம் அவற்றை சாப்பிட வேண்டும்.
2.கீரை வகைகள்
வைட்டமின் C,A,D ஜிங்க் மற்றும் பொட்டாசியம் மற்றும் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. எனவே தினமும் ஒரு கீரை வகையை நாம் உணவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நம் உடலுக்கு இது வலு சேர்க்கும்.
3.முட்டை
முட்டையில் வைட்டமின் D சத்து உள்ளது. இது நம் உடலில் புதிய செல்களை உருவாக்கி வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்கின்றன. எனவே தினமும் உணவில் இதை மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.மஞ்சள்
மஞ்சள் இயற்கையாகவே இது ஒரு கிருமிநாசினி. எனவே இதை உணவுப் பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை வெந்நீரில் சிறிது கலந்து குடித்தால் நம் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து நம் உடலைப் பாதுகாக்கும் ஆற்றல் பெற்றது.
5.பூண்டு
ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் பூண்டு ஒரு முக்கிய உணவாக கருதப்படுகின்றது. தலைவலி முதல் புற்றுநோய் வரையுள்ள நோய்களை இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. எனவே உணவுப் பொருட்களில் இதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6.பாதாம்
பாதாமில் வைட்டமின் E, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது மனித உடலில் வெள்ளை அணுக்கள் தூண்டி தொற்று நோய் வராமல் தடுக்க இது உதவும்.
7.கிரீன் டீ
புற்று நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க இது உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
8.சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தில் அல்லிசீன் என்ற அமிலம் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இது உதவும்.
9.தயிர்
இது நம் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நல்ல ஆற்றலை தரும்.
10.பப்பாளி மற்றும் கேரட்
இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். பப்பாளியானது செரிமான பிரச்சனைகளை நீக்கி கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நம் உடலை பாதுகாக்க உதவும். எனவே இதை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.