Sutru Sulal Pathukappu Kavithaigal
இயத்திரத்துவமும், நவீனத்துவமும் நிறைந்த இன்றய உலகம் இயற்கையை காக்க தவறி சுற்றுச்சூழலை அழித்து கொண்டிருக்கிறது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் உடைய கடமை ஆகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு தம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழலை பேணிக்காப்பதின் அவசியத்தை உணர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவிதைகளை (Environmental protection Quotes) எழுதியுள்ளோம்.
எனவே ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாத்து,
இயற்கையை பேணிக்காப்போம். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். இயற்கையை நம்மால் முடிந்த அளவு நேசிப்போம். காடுகளை அழிப்பதை தவிர்ப்போம். விவசாயத்தை பெருக்குவோம்.
சுற்றுச்சூழல் கவிதைகள்
நல்ல காற்றை..
விச காற்றாக.. மாற்றும்
மனித இனமே..
இயற்கையின் சாபத்திற்கு
ஆள் ஆகாதே...!
மரமே உன்னை அழித்தவனை
பழி வாங்காதே...
ஏனென்றால்
அவனே அழிந்து விடுவான்...!
நாடு எல்லாம் கோட்டை...
காடு எல்லாம் ஒரே வேட்டை...
மனிதர்கள் பண்றாங்க சேட்டை...
ஒரு நாள் எல்லோரும் ஆகப் போறோம் பிண மூட்டை...!
விண்ணை எண்ணி.. மண்ணை விட்ட, மனித குலமே... நாளை வயிறு ஆற உணவில்லை... என்பதை மறவாதே...!
இயற்கை என்பது.
பணமும் இல்லை.. பதவியும் இல்லை..
அது நம் வாழ்க்கை..!
இயந்திரத்தை நம்பி வாழும் உலகமே... இயந்திரத்தை அழிக்க இயற்கை இருக்கிறது.. என்பதை மறவாதே...!
சுற்றுச்சூழலை அழிக்க
அது யாருடைய
சொத்தும் இல்லை...
இது இயற்கையின் சொத்து..!
சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித குலத்திற்கு நாம் செய்யும் துரோகம் மட்டுமல்ல....மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்யும் துரோகம்...!
இந்த உலகத்தை
காப்பாற்ற பிறந்த
கடைசி தலைமுறை
நாம் மட்டுமே....!
ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய பூமி போதுமானது...! ஆனால் மனிதனின் பேராசைக்கு அல்ல...!
நாம் இருக்கும்போது நாம் வாழ்வது அதிஷ்டம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் உலகம் அழிவை நோக்கி உள்ளது.
பூமி வெப்பமடைதல் நம்முடைய உயிரினத்தின் அச்சம். மரம் வளர்ப்போம் நம் சந்ததியினரை வாழவைப்போம்.
தான் நட்டு வைத்த மரம் தனக்கு மட்டும் உதவாமல், எல்லோருக்கும் உதவும் தன்மை பெற்றது.