Corona Vizhipunarvu Kavithaigal
கொரோனா விழிப்புணர்வு கவிதை என்ற தலைப்பின் கீழ் கவிதைகள் மற்றும் "கொரோனா- மனிதன்" உடனான உரையாடல்களை பார்ப்போம்.
கொரோனா விழிப்புணர்வு கவிதைகள்:
தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத மனிதா...
கொரோனா நோய் உன்னை பிடிக்க ஓடிவரும்..!
முகம் கவசம் அணியாத மானிடா... கொரோனாவால்
உனக்கு உயிர்க்கவசம் இல்லாமல் போகுமடா..
கைகளை முறையாக கழுவாத கை குழந்தை போன்ற மனிதா...
கொரோனா பகையாக வந்து உன்னை வாட்டும் அதை நீ அறிவாயா..?
நீ மனித இனத்தை அழிக்க நாங்களும் காரணமே...!
உன்னை உருவாக்கிய நாங்கள் இன்று...
உன்னை அழிக்க படும் பாடுபடுகிறோம்...!
உன்னால்
இங்கு நிறைய மாற்றம்...
உன்னை அழிக்க அனைவரும் தனித்தனியாக வாழ பழகுவோம்...
உன்னை அழித்து மீண்டும் ஒன்றாக இணைவோம்...!
"கொரோனா- மனிதன்" உடனான உரையாடல்கள்:
கொரோனா : ஓரே.. கூட்டமா இருக்கு இதோ நான் வரேன்...!
மனிதன் : 'அய்யாசாமி'.. நான் ரொம்ப பாவம் என்னை விட்டுரு...
கொரோனா : என்ன.. நான் உனக்கு சாமியா ? நான் உன்னை அழிக்க வந்தவன் டா... உன்னை அழிகாமல் விடமாட்டேன்.
மனிதன் : என்ன பாத்தா பாவமா இல்லையா..! எந்த தப்பும் செய்யல என்னை விட்டுவிடு...
கொரோனா : உன்ன பாத்தா எனக்கு பாவமா தான் இருக்கு, ஆனா உன்னை என்னால காப்பாத்த முடியாது.அது உன் கையில தான் இருக்கு...
மனிதன் : என்னாது?. என்ன காப்பாத்திக்க முடியாதா? ஐயையோ...!
கொரோனா : நீ என்ன கத்தினாலும் கதறினாலும் உன்னை என்னால காப்பாத்த முடியாது ,உன்னை அழிக்காமல் நான் விடமாட்டேன்.
மனிதன் : இப்படி கொடூரமாய் இருக்கியே நீ யாருய்யா.? நீ எங்க இருந்த?. ஏன் இங்கு வந்த..?
கொரோனா : எல்லாம் தீய மனிதர்கள் செய்த வேலை.. அதனாலதான் நான் உன்னை அழிக்க வந்திருக்கிறேன்.
மனிதன் : சரி.. தீய மனிதர்களை கொல்ல வேண்டியது தானே.. என்னை எதுக்கு நீ கொல்ற.? என்ன விட்டுடு..
கொரோனா : சரி நீ ரொம்ப பாவமா இருக்கே ன்னு.. நான் சொல்றேன்.. உன்ன காப்பாத்தறது உன்னால மட்டும்தான் முடியும்.
முதல்ல
1. தனிமனித இடைவெளியை முறையா கடைபிடிக்கனும்
2. முக கவசம் கண்டிப்பா அணியவும்
3. அடிக்கடி சோப்பு போட்டு நல்லா கழுவணும்
4. வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போகக்கூடாது
5. ஏதாவது காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று உடம்ப பாத்துக்கணும்.
இதையெல்லாம் ஒழுங்கா கடைபிடித்தால் நான் உன்னை நெருங்க முடியாது..
மனிதன் : நீ எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும்...
உன்னிடம் என்ன காப்பாற்ற வழி சொன்ன பாத்திலே..
நீ வேற லெவல்..!