தன்னம்பிக்கையால் உயர்ந்த மனிதரின் உண்மை கதை
Panasonic founder ( Konosuke Matsushita ) Real life Story
Panasonic நிறுவன தலைவரின் வாழ்க்கை கதை
ஜப்பான் நாட்டில் பிறந்த ஒரு சிறு பையன். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் அந்த பையனுடைய குடும்பம் ஒரு சாதாரண குடும்பம் சொந்த வீடுகூட இல்லாமலிருந்தது தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டான்.
பிறகு ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தான் அதிகாலையில் தொடங்கி இரவு வரை அவனுடைய உழைப்பு தொடர்ந்தது. மிகவும் கஷ்டப்பட்டு தன் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருந்தான். பிறகு நாட்கள் சென்றதும் சின்னப் பையனான அவன் பெரிய ஆளாக வளர்ந்தான்.
பின்னர் ஒரு எலக்ட்ரான் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். எலக்ட்ரான் உதிரிபாகங்கள் ஆன பல்பு மற்றும் இதர பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து அதனுடைய பணிகளை கற்றுக்கொண்டு இதேபோல புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொருள்களை கண்டுபிடிக்க அவருக்கு ஆர்வம் வந்தது. இதன் விளைவாக தான் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து ஒரு புதிய மாதிரியை வடிவமைத்து தன்னுடைய முதலாளியிடம் சமர்ப்பித்தான். ஆனால் அவரது முதலாளி இதனை ஏற்காமல் சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த போதிலும் சிறிதும் மனம் தளராமல் முயற்சி செய்து கொண்டே இருந்தான். பிறகு தன்னுடைய 22வது வயதில் வேலையை விட்டு நின்று விட்டார் பிறகு தான் சேமித்து வைத்த பணத்தை வைத்து தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஒரு சிறிய எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்தினார். பிறகு தான் தயாரித்த உதிரிபாகங்களை விற்பனை செய்ய கடைகளுக்குச் சென்று விற்க முயற்சி செய்தார்.
ஆனால் புதிய நிறுவனம் என்பதால் அவரிடம் எந்த ஆர்டரும் தர யாரும் முன்வரவில்லை. இதனால் மனமுடைந்தார் அதுமட்டுமின்றி தன்னுடைய பணம் அனைத்தும் தீர்ந்தது. இதனையும் பொருட்படுத்தாமல் முயற்சி செய்துகொண்டே இருந்தார். இதனை அறிந்த உறவினர்கள் இது வேண்டாத வேலை எனவே மீண்டும் பழைய வேலைக்கே சென்று விடுங்கள், என்று அறிவுரை கூறினர்.
கடும் மன உளைச்சலில் இருந்த அவர் ஒரு நாள் ஒரு நல்ல செய்தி வந்தது அது என்னவென்றால் ஆயிரம் ஆர்டர் அவருக்கு வந்தது. அன்று ஆயிரத்தில் தொடங்கிய அந்த நிறுவனத்தின் உடைய பயணம் அந்நிறுவனத்தின் 100-வது ஆண்டு விழாவில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர்.
இன்று அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான டிவி,வாஷிங் மெஷின், ரேடியோ, ஹெட் போன், மொபைல் போன், போன்ற பல பொருள்கள் இன்று தயாரித்து முன்னணி நிறுவனமாக உள்ளது.
இத்தகைய முயற்சிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? அவர் தான் Konsouke Matushita.
அந்த நிறுவனம் எது தெரியுமா? அது தான் Panasonic
ஏழ்மையான குடும்பம் போதிய படிப்பில்லை ஆறுதல் கூற யாருமில்லை என்றபோதிலும் தன்னுடைய கடும் முயற்சியால் தன்னம்பிக்கையாலும் வாழ்க்கையில் வெற்றி அடைந்தார் அவரது தன்னம்பிக்கை இன்று எப்போதும் நினைவு கூறப்படுகிறது.