- vivasayi kavithai in tamil
- விவசாயி கவிதைகள்
- விவசாயம் காப்போம்
விவசாயி கவிதைகள்
சாராயம் விற்பவன் ராஜாவாக வாழ்வதும்...!
சாப்பாடு தரும் விவசாயி
'சாப்பாடு இன்றி' சாவதும் தொடர்கதையாகிறது..
விவசாயியே.. உன்னை இந்த உலகத்தில் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை....
பணம் இல்லாமல் நம்மால் வாழ முடியும். அது நிறைய பேரிடம் இருக்கிறது...
சோறு இல்லாமல் நம்மால் வாழ முடியாது. ஆனால் அது பரம ஏழையிடம் மட்டுமே
இருக்கிறது...
தன் குழந்தை பட்டினியால் தவித்திருக்க...
தான் உற்பத்தி செய்த உணவை பணக்கார குழந்தைகள் பகடைக்காய் விளையாடுவதைக் கண்டு தவிக்கிறேன் - விவசாயி.
மக்கள் ஸ்மார்ட் போன் வாங்குகின்ற அளவுக்கு செல்வந்தராகவும்..
காய்கறி காரர்களிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்..!
உப்பு தண்ணீரில் விவசாயம் செய்ய ஆற்றல் இருந்தால்....
விவசாயி தன் கண்ணீரிலே விவசாயம் பண்ணி இருப்பார்...!
ஒரு கிராமத்தை அழித்து நகர(க)ம் ஆகலாம்...
ஆனால் ஒருபோதும்
ஒரு நகர(க)த்தை அழித்து கிராமமாக்க முடியாது...!
விடுமுறை கிடையாது..
மாத சம்பளம் கிடையாது.. வருங்கால வைப்பு நிதி கிடையாது.. ஓய்வு ஊதியம் கிடையாது... இருந்தாலும்..
முகம் சுளிக்காமல் நம் வயிறு உழைக்கிறார்கள் "விவசாயிகள்".
சிறிது நேர மழைக்கு சேற்றைக் கண்டு வீதியில் நடக்க அசிங்கப்படும் நாம்...
வாழ்நாள் முழுவதும் சேற்றில் இறங்கி வேலை செய்யும் விவசாயின் துயரம் எப்படி புரியும்..?
கோடி சம்பளம் வாங்கும் நடிகரை கண்டு வியந்த நாம்...
கடும் வெயிலில் உழைக்கும் விவசாயியை எப்படி மறந்தோம்..?
எனது கடைசி ஆசை என்னவென்றால் நான் இறந்தால் என் உடலை எரிக்காமல் புதையுங்கள்..
என் உடலும் கூட இந்த மண்ணிற்கு உரம் ஆகட்டும்..! - விவசாயி
என் தேசத்தின் விவசாயிகளின் நிலை என்னவென்றால்..
நடிப்புவனுக்கு இருக்கும் மரியாதை..
உழைப்பவனுக்கு இல்லை..
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு இவ்வுலகத்தில்...
உணவு தயாரிக்க விவசாயியை தவிர வேறு வழி இருக்கா இவ்வுலகில்...?
ஊரடங்கு போட்டவுடன் நாம் தேடிச் சென்றது வாங்கியது அரிசி,பருப்பு காய்கறி தானே தவிர...
தங்கமும் வெள்ளியும் அல்ல இனியாவது உணவின் தேவையை அறிவோம்..!
விதைப்பவரின் பெருமை உணர்வோம்..!
எவ்வளவு விதை வளர்த்தாலும் தான் மட்டும் வளராதவன் "விவசாயி" மட்டுமே.
விவசாயி ஒரு பார்வை
மனிதனின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவும், இருக்க இருப்பிடம், உடுத்த உடையும் இருந்தால் போதும், நாம் வாழலாம். நாம் வயிறார சாப்பிட உணவை தயாரித்து தருபவன் விவசாயி. அப்படிப்பட்ட விவசாயி படும் துன்பங்கள் ஏராளம்.
மனித சமூகமே விவசாயின் கஷ்டங்களை புரிந்து கொண்டு விவாசாயிக்கு மரியாதை செலுத்துவோம். உணவுப்பொருள்களை வீணாகாமல் விவசாயிக்கு பெருமை சேர்ப்போம்.
"விண்ணை எண்ணி பார்த்து கொண்டு மண்ணை விட்டால் நாளை மனித இனம் ஒன்றே காணாமல் போய் விடும் என்பதை மறவாதே"
அடுத்த சந்ததியினரை காப்பாற்றப் போகும் இன்றைய சமூகமே...
விழித்துக்கொள்..! நாளைய எதிர்காலம் விவசாயி கையில் தான் என்பதை மறவாதே...
விவசாயிக்கு மரியாதை செய்வோம்.
விவசாயத்தை காப்போம்.